KAAPAN USA OTHERS

சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் விடைபெற்று இங்கு வாருங்கள்..!! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் கோல்டன் டிக்கெட்டுக்கான டாஸ்குகள் கடுமையாக கொடுக்கப்பட்டது.

Bigg Boss 3 Tamil Vijay TV Promo 2 Hotstar Cheran Losliya

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா வெளியேறியதைத் தொடர்ந்து, இந்த வாரம் எலிமினேஷனுக்கு சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகினர். இவர்களில் காப்பாற்றப்படும் போட்டியாளர் யார் என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான மூன்றாவது  ப்ரோமோவில் கமல் அனைவரிடமும் இருந்து சேரன் மற்றும் லாஸ்லியா என இருவரும் விடை பெற்று வருமாறு கூறுகிறார். இதை கேட்டு மற்ற பிரபலங்களுக்கு மட்டும் ஷாக் இல்லை ரசிகர்களுக்கும் தான்.எனினும் பிக்பாஸ் லாஸ்லியாவை வெளியேற்றுவது போல் வெளியேற்றி மீண்டும் வீட்டிற்குள் அனுப்பவும் வாய்ப்புள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சேரன் மற்றும் லாஸ்லியா இருவரும் விடைபெற்று இங்கு வாருங்கள்..!! பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ வீடியோ