‘நெட்டை குட்டை முட்டை.. கலாய்த்த சாண்டி.. ! Tension ஆன வனிதா’- பிக் பாஸ் புரொமோ வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 21, 2019 10:16 AM
பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் உள்பட அனைவரும் சூப்பராக கலக்கி வரும் நிலையில் வனிதா தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

நேற்று டீச்சர் கஸ்தூரி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் செய்து சொதப்பிய வனிதா, இன்று அனைவரும் பாட்டுப்பாட வேண்டும் என்ற டாஸ்க்கில் பாட்டு பாடாமல் அமைதியாக இருந்தார். அவருக்கு என்ன ஆச்சு என்று டீச்சர் கஸ்தூரியும் பிரின்ஸிபால் சேரனும் விசாரிக்க, தனக்கு டென்ஷனாக இருப்பதாக வனிதா கூறினார்.
பள்ளி டாஸ்க் கொஞ்சம் ஓவராக இருப்பதாக ஏற்கனவே பிக்பாஸ் ஆடியன்ஸ்கள் நொந்து நூலாகியிருக்கும் நிலையில் வனிதா ஆடியன்ஸ்களை மேலும் வெறுப்பேற்றி வருகிறார்.
இன்றைய டாஸ்க்கில் லாஸ்லியா, செரின், சாண்டி ஆகியோர்களின் பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியை சரியாக புரிந்து கொள்ள முடியாத ஷெரின், 'சேத்துக்குள்ள சின்னப்புள்ள தத்திதத்தி சிக்கிகிச்சு' என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
‘நெட்டை குட்டை முட்டை.. கலாய்த்த சாண்டி.. ! TENSION ஆன வனிதா’- பிக் பாஸ் புரொமோ வீடியோ வீடியோ