பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோக்களில் தொகுப்பு இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 08, 2019 06:23 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான இரண்டாவது புரமோவில் இந்த வாரம் பெஸ்ட் பர்ஃபாமர் யார் என கேட்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
அதற்கு வனிதா மற்றும் தர்ஷன் என பதிலளிக்கிறார் ஷெரின். உடனே கமல் நீங்களா செலக்ட் பண்ணீக்கிட்டீங்களா என்று கேட்கிறார்? அப்போது கவின், மாட்னீயா என்பதை போல உதட்டை கடித்தப்படி நக்கலாக சிரித்து தலையை ஆட்டுகிறார்.
அதற்கு வனிதா இல்லை என்று கூறுகிறார். எல்லோரும் சேர்ந்துதானே பேசி செலக்ட் செய்ய வேண்டும் என கமல் மீண்டும் கேட்க, மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரிக்கின்றனர். அப்போது எல்லாத்துக்கும் கைத்தட்டி என்னை வம்புல மாட்டிவிட்டுடுவிங்க என்கிறார் கமல்.
நான்கு பேரும் பேசிதான் முடிவு செய்தோம் என்கிறார் சேரன். ஆனால் தர்ஷன் இல்லை என்று கூறுகிறார். இதற்கும் மக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வில் சேரன் நல்ல அனுபவம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் இங்கு வந்தேன். அது எனக்கு கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்.
எல்லா நண்பர்களையும் பாத்தாச்சு, எல்லா முகங்களையும் பாத்தாச்சு என்கிறார். அப்போது கமல், சேரன் பெயர் பதிக்கப்பட்ட கார்டை காட்டி வாருங்கள் சந்திப்போம் என்று அழைக்கிறார். உடனே கைகளை தூக்கியப்படி நன்றி சார், வருகிறேன் என கிளம்புகிறார் சேரன்.
அப்போது அதிர்ச்சியானது போல் பார்க்கும் லாஸ்லியா, நீங்கள் இருக்கவேண்டும். இது நியாயம் இல்ல, நான்தான் எனக்கு போக வேண்டும் என கூறி அழுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வனிதா இது எதைநோக்கி போகிறது என்று கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோக்களில் தொகுப்பு இதோ! வீடியோ