சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம்.. கஸ்தூரியை புகழ்ந்து ட்வீட் பதிவிட்ட சாக்ஸி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கஸ்தூரியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சாக்ஷி அகர்வால் சூப்பர் மாம் என புகழுந்துள்ளார்

Bigg Boss 3 Tamil Sakshi Agarwal Tweet About Kasthuri Shankar

நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால். அண்மையில் தன்னுடைய சப்போர்ட் சேரன் சாருக்குதான் என்று பதிவிட்டிருந்தார் சாக்ஷி.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்து வெளியேறிய கஸ்தூரி குறித்தும் சாக்ஷி அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதாவது, சூப்பர் மாடல் டூ சூப்பர் மாம் என்று பதிவிட்டுள்ள சாக்ஷி, உங்கள் வார்த்தைகளில் இருந்து வாழ்க்கையில் நீங்கள் கண்ட போராட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

நீங்கள் பல பெண்களுக்கு உத்வேகமாக உள்ளீர்கள், அவர்களில் நானும் ஒருத்தி என்று பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.