Godavari News Banner USA

'Bigg Boss-அ கூப்டு.. அதுவரைக்கும் நான் இந்த Bloody Game விளையாட மாட்டேன்' - மைக்கை வீசிய வனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசன் தற்போது மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Bigg Boss 3 Promo - Vanitha removes her mike, not to play this bloody game after heated conversation with Tharshan

இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே சண்டை சச்சரவு என தினசரி பிக் பாஸ் வீடு சலசலப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த சலசலப்பு தற்போது கலவரமாக மாறி வருகிறது. இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில், வனிதா மற்றும் தர்ஷன் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட, இறுதில், விளையாட்டை தொடரப்போவதில்லை என கூறி வனிதா மைக்கை கழட்டி வீசுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், ‘நீங்க வேணும்னா சாக்ஷிக்கிட்ட கொடுத்திடுங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஆனா கேம் சரியா இல்ல..’ என வனிதா சொல்ல, ‘நீங்க அவுட் ஆனதுக்கு பிறகு கேம் ரூலை மாத்தணும் சொல்றது ஏத்துக்க முடியாது. கேம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே சொல்லி இருக்கணும்’ என தர்ஷன் வாதிடுகிறார்.

இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, ‘இது உனக்கு சம்மந்தம் இல்லாதது, எதுக்கு தேவையில்லாம நீ மூக்க நுழைக்கிற’ என கேள்வி கேட்டு வனிதா சீற, ‘எனது கருத்தை நான் சொல்கிறேன்’ என தர்ஷன் கூறுகிறார்.

இதனால் கடுப்பான வனிதா, ‘பிக் பாஸை கூப்பிடுங்க, தர்ஷன் சொல்றது சரியான்னு அவர் சொல்லட்டும், அதுவரைக்கும் நான் இந்த Bloody Game விளையாட மாட்டேன்’ என ஆவேசமாக பேசிக் கொண்டு மைக்கை கழட்டி வீசினார்.