www.garudabazaar.com

Video: பாரதி கண்ணம்மா அஞ்சலிய இப்படி பாத்துருக்கீங்களா? தெறிக்கவிடும் இன்ஸ்டா ரீல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

Bharathi Kannamma Anjali viral instagram reel video

குறிப்பாக இந்த சீரியலுக்கு தமிழகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர். புதுமுக நடிகர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் ஆரம்பத்தில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் கூட படிப்படியாக ஏக பெரும்பான்மையான வரவேற்பைப் பெறத் தொடங்கியது.

இந்த சீரியலில் தான் நடிகை கண்மணி மனோகரன், ‘அஞ்சலி’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கணவராக நடிக்கும் அகிலன் மற்றும் இவருடைய இணையானது இணையத்தில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். அகிலன்- அஞ்சலி  இணைக்கு ரசிகர்கள் பக்கங்கள் நிறையவே உள்ளன.

இந்த சீரியலில் நாயகனாக, ‘மேயாத மான்’ படத்தில் நடித்த அருண் பிரசாத் பாரதியாகவும், ரோஷினி ஹரி பிரியன் கண்ணம்மாவாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் இருந்து வந்த கண்மணி மனோகரன், ஆரம்பத்தில் அஞ்சலியாக நடித்ததற்காக கடுமையான விமர்சனங்களை பெற்றார். 

ஆனாலும் தற்போது அவரது கேரக்டர் பலருக்கும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. இவரின் சமீபத்திய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவில் வழக்கமான சீரியல் மேக்கப் இல்லாமல் தமக்கே உரிய இயல்பான தோற்றத்தில் இன்னொரு தோழியுடன் ஆட்டம் போடும் கண்மணி மனோகரனுக்கு ரசிகர்கள் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

ALSO READ: அடடே.. கமலின் 'விக்ரம்' படத்தில் இந்த மாஸ்டர் பட 'பிரபலங்கள்!'.. புழுதி பறக்கும் அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Anjali viral instagram reel video

People looking for online information on AkilanAnjali, Anjali, BharathiKannamma, VijayTelevsion will find this news story useful.