Reliable Software
www.garudabazaar.com

ப்ரோபோஸ் செய்த புகழ்.. ‘தர்ஷா இருக்காங்க!’ - அலெர்ட் செய்த பவித்ரா!.. செம்ம Fun Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த மார்ச் 7-ஆம் தேதி நடந்த Behindwoods-ன் டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் தளங்களில் இயங்குவோருக்கு வழங்கப்பட்ட Behindwoods Gold Icons விருது விழாவில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

Behindwoods awards Pugazh Proposes Pavithra cute Video

இதில் Most Promising Female Personality on Reality Television-க்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை குக் வித் கோமாளி பிரபலமான சுனிதா வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் தொகுத்து வழங்கிய மணிமேகலை மற்றும் புகழ் இருவரும் இதனை மறக்க முடியாத தருணமாக மாற்றினர்.

அதன்படி, பவித்ராவையும் சுனிதாவையும் வீச்சு பரோட்டா செய்வது போல் டான்ஸ் ஆடும் டாஸ்கை செய்யச் சொல்லி கூறினர். இருவரும் வேற லெவலில் வீச்சு பரோட்டாவில் தொடங்கி வாழைக்காய் பஜ்ஜி, தோசை செய்முறை உள்ளிட்டவற்றை டான்ஸிலேயே செய்து அசத்திவிட்டனர். அப்போது பவித்ராவை பார்த்து என்ன தோசை ஃபர்ஸ்ட் புளோரெல்லாம் போகுது என புகழ் கலாய்த்தார்.

அதன் பிறகு சுனிதா சிங்கப்பெண்ணே பாடலின் தம்முடைய வெர்ஷனை பாடினார். பின்னர் தம்முடைய வெற்றிக்கு புகழுக்கு பாதி புகழ் இருக்கிறது என பவித்ரா குறிப்பிட்டார்.  பவித்ராவின் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இது என்று கூறிய புகழ், பவித்ராவுக்கு செம்ம க்யூட்டாக ப்ரோபோஸ் செய்ய, ‘இப்படிலாம் பேசுனா எப்படி ரிஜக்ட் பண்றது’ என்று கூறிய பவித்ரா, ஷோவுக்காக புகழை ரிஜக்ட் செய்வது போல் பேச, புகழ் ஃபீல் பண்ணும் அந்த ஒரு அழகான மொமண்ட்டை இந்த வீடியோவில் பார்க்கலாம். இடையில் தர்ஷாவை பவித்ரா நினைவுபடுத்த அனைவரும் வெடித்து சிரித்தனர். இந்த முழு வீடியோவை Behindwoods TV-யில் காணலாம்.

ப்ரோபோஸ் செய்த புகழ்.. ‘தர்ஷா இருக்காங்க!’ - அலெர்ட் செய்த பவித்ரா!.. செம்ம FUN VIDEO! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods awards Pugazh Proposes Pavithra cute Video

People looking for online information on Pavithra Lakshmi, Pugazh will find this news story useful.