"புலம்பினேன், ஒப்பாரி வச்சேன்.., ஆனா நீங்க அத".. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வெளியிட்ட Video!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பே ஆரம்பித்த சீரியல் 'பாக்கியலட்சுமி'. கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகள் உடன் ஒரு குடும்பத்தலைவி எப்படி ஒரு குடும்பத்தைச் சமாளிக்கிறார் என்பது பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி. எனவே குடும்ப தலைவிகள் பலருக்கும் இது பேவரைட் சீரியலாக மாறிப்போனது. அதுவும் முக்கியமாக குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒருகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை என்று நினைக்கும் பாக்கியலட்சுமி எப்படி தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்கிறார் என்பதுதான் கதையின் திருப்பம்.

இதை பார்த்த பலரும் தங்களுக்கு இந்த சீரியல் ஒரு உந்துதலாக இருப்பதாகவும் பாசிட்டிவிட்டியை உருவாக்குவதாகும் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக இரண்டாவது மகன் எழில் தனது தந்தைக்கு இருக்கும் உறவை கண்டுபிடித்தது தான் சுவாரஸ்யமாக செல்கிறது. சமூக வலைதளங்களில் கூட இதைப் பற்றிய பதிவுகளை காண முடிந்தது. இந்நிலையில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் சமீபத்தில் லைவ் வந்திருந்தார். அப்போது இது பற்றி கூறும் பொழுது "கடந்த சில நாட்களாக புரோமோவை பார்த்துவிட்டு பலரும் எனது இன்பாக்ஸில் வந்து மிகவும் வக்கிரமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். தயவுசெய்து கேட்கிறேன், அது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இது பற்றி வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் கூறும்போது "நான் புலம்பினேன். ஒப்பாரி வைத்தேன். ஆனால் நீங்கள் இவ்வளவு எனக்கு ஆதரவு தருவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. பலரும் எனக்காக ஆறுதலான வார்த்தைகளை அனுப்பி உள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று மனதார கூறியுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.
"புலம்பினேன், ஒப்பாரி வச்சேன்.., ஆனா நீங்க அத".. பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வெளியிட்ட VIDEO! வீடியோ