www.garudabazaar.com

குடும்பமாய் திரண்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள்! வைரல் ஃபோட்டோ.. என்ன விசேஷம்..? Baakiyalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி தன்னுடைய கணவர் கோபியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

Baakiyalakshmi Vijay TV 700th Episode பாக்கியலட்சுமி சீரியல்

கோபியோ பாக்கியலட்சுமியை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை முறையாக திருமணம் செய்து கொண்டு அதே தெருவில் இருக்கும்  வீட்டில் குடியேறி வசித்து வருகிறார். இதனிடையே கோபி & பாக்கியலட்சுமியின் மகளான இனியா, தந்தை கோபியை வீட்டுக்கு அழைத்து வந்தே தீர வேண்டும் என்கிற முடிவுடன் கோபியுடன் சென்று வசித்து வருகிறார். இனியா சென்றதால் கோபியின் அப்பாவும் இனியாவின் தாத்தாவுமான பாக்கியலட்சுமியின் மாமனார் அதே வீட்டில் சென்று வசிக்க தொடங்கி விட்டார்.

இன்னொரு பக்கம் பாக்கியலட்சுமி செய்து வந்த சமையல் காண்ட்ராக்ட் பணி தற்போது சிக்கலை சந்தித்து மீண்டு எழுந்து வருகிறது. ராதிகாவுடனான தேர்தல் போட்டியில் பாக்கியலட்சுமி வெற்றி பெற்றார். ராதிகா இப்போதுதான் மெல்ல மெல்ல கோபியின் இன்னொரு முகத்தை அறிந்து கொண்டு வருகிறார். ஆனால் கணவர் கோபியின் உதவியின்றி, கணவரின் குடும்பத்தையும், தனது தொழிலையும் முன்னேற்ற்ற பாடு படுகிறார் பாக்கியலட்சுமி. இப்படி ஒரு இல்லத்தரசின் கதையாக இல்லத்தரசியின் போராட்டம் மிக்க வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

இப்படி குடும்ப ஆடியன்ஸ் மிகவும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாக மாறியிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விஜய் டிவியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது 700 எபிசோடுகள் நிறைவடைந்து இருக்கின்றன. இதை கோபியாக நடிக்கும் நடிகர் சதீஷ் தமது சமூக வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Baakiyalakshmi Vijay TV 700th Episode பாக்கியலட்சுமி சீரியல்

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi serial today, Baakiyalakshmi today episode will find this news story useful.