www.garudabazaar.com

போடு! நம்ம பாக்கியலட்சுமி எழில்.. சைலண்ட்டா நடிச்ச ரொமாண்டிக் வீடியோ.. வெளியான டீசர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது முக்கியமான சீரியலாக விளங்கி வருகிறது.

baakiyalakshmi actor vj vishal deepthi sunaina Emone

Also Read | “அம்மாவ பார்த்துக்கங்க”.. குடும்பம், குழந்தைகள் பற்றி சன்னி லியோன் அட்வைஸ்..! Exclusive

இதில் முதன்மை கதாபாத்திரமான பாக்கியலட்சுமிக்கு அவருடைய கணவர் கோபி துரோகம் செய்யும் வகையில் ராதிகா என்கிற இன்னொரு பெண்ணை விரும்பி வந்தார். கணவனை இழந்த ராதிகா, கோபியை முழுமையாக நம்பினார். ஆனால் அந்தப் பெண்ணுக்கும் கோபி துரோகம் செய்துவிட்டார். அதாவது தன் மனைவி தன்னை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருப்பதாக பொய் சொல்லி ராதிகாவை காதலித்து வந்த கோபி, தற்போது அம்பலமாகிவிட்டார்.

ஆம், பாக்யாவும் ராதிகாவும் நல்ல தோழிகள். இதனால் ராதிகாவே பாக்கியாவுக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிட்டது என்று ராதிகா குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். இதனிடையே பாக்கியலட்சுமி வீட்டில் இருந்து கோபியுடன் சண்டை போட்டுவிட்டு சுயமாக வாழ்வதாக சொல்லி வெளியேறி விட்டார்.

baakiyalakshmi actor vj vishal deepthi sunaina Emone

இதனிடையே எழில் கதாபாத்திரம் இயக்குநராக ஒரு படம் பண்ணுவதற்கான முயற்சியில் இருக்கும். ஆனால் அந்த தயாரிப்பாளரின் மகள் எழில் மீது ஆசைப்பட, எழிலோ தான் காதலிக்கும் அமிர்தாவையே திருமணம் செய்யவுள்ளதாக கூறுகிறார். இதனால் அவரது பட  தயாரிப்பாளர் கோபப்பட, படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சீரியலில் பாக்கியலட்சுமி மகனாக வருபவர்தான் வி.ஜே.விஷால். எழில் என்கிற கதாபாத்திரத்தில் வரும் இவர், பல்வேறு நிலைகளும் பாக்கியாவுக்கு உறுதுணையாக இருக்கிறார்.

baakiyalakshmi actor vj vishal deepthi sunaina Emone

முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருடன் இணைந்து கலந்து கொண்ட விஜே விஷால்,  தனக்கு பிரேக் அப் ஆகிவிட்டதாக விஜே பிரியங்காவிடம் கூறியிருந்தார். இந்நிலையில்தான் விஜே விஷால் நடித்துள்ள ரொமாண்டிக் தெலுங்கு ஒரிஜினலான ‘எமோனே’ எனும் ரொமாண்டிக் படைப்பின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VJ Vishal (@iamvjvishal)

Also Read | “பெண்களை அப்படி காட்டுறோமா?.. சீரியலை நிறுத்த சொல்லிட்டாங்க!” ─ ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive

 

baakiyalakshmi actor vj vishal deepthi sunaina Emone

People looking for online information on Deepthi sunaina, Emone, VJ Vishal will find this news story useful.