'கேம் ஆஃப் துரோன்ஸ்' முடிஞ்சா என்ன ? 'அவதார் 2' இருக்கே - ரசிகர்களை மகிழ்வித்த அவதார் டீம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது 'டைட்டானிக்' திரைப்படம் மூலம் உலகையே திரும்பி பார்க்கவைத்தவர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் உலக அளவில் வசூல் சாதனை புரிந்தது.

Avatar team tweets about Game Of Thrones and Avatar

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற டிசம்பர் 17, 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.  மேலும் அதன் 3 ஆம் பாகம், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதியும், அவதார் 4, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியும், அவதார் 5 ஆம் பாகம், 2027 ஆம் ஆண்டு டிசம்பர்  17 ஆம் தேதியும் வெளியாகி இருப்பதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில் 'அவதார்' படக்குழு தனது பிரத்யேக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பயணம் முடிந்தால் அடுத்த பயணம் தொடங்கும். கேம் ஆஃப் துரோண்ஸ் மூலம் உங்களுக்கு பரீட்சையமான முகங்களை பாருங்கள். இவர்கள் அவதார் தொடர் பாகங்களில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் புகழ்பற்ற கேம் ஆஃப் துரோன்ஸ் நடிகர்களான Oona Chaplin, Brendan Cowell ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பரபரப்பாக சென்று கொண்டிருந்த கேம் ஆஃப் துரோன்ஸ் வெப் சீரிஸ் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் சோகத்தில் இருந்த படக்குழுவினருக்கு அவதார் படத்தின் ட்வீட் சற்று ஆறுதல் அளிக்கலாம்.