நிவின் பாலியுடன் இணையும் ’அருவி’ அதிதி - புதுப்பட விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 03, 2019 05:15 PM
2017ம் ஆண்டு வெளிவந்த அருவி படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் அதிதி பாலன். இந்த படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதிதிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால் தொடர்ந்து இவரை திரைப்படங்களில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் அதிதி தான் நடிக்க இருக்கும் அடுத்த படம் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
’படவெட்டு’ என்ற மலையாளப் படத்தில் பிரேமம் படத்தின் நாயகன் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கிறார். அதிதி இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
லிஜு கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படம் வெற்றியடைய பிரார்த்திக்குமாறு அதிதி பாலன் இன்ஸ்டாவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags : Aditi Balan, Nivin Pauly, Padavettu