நடிகர் அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'... பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி பற்றி வைரலாகும் தகவல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். அஜித்துக்கு வில்லனாக இவர் நடித்த என்னை அறிந்தால், இவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் இவர் நடித்த தடம் படமும் ஹிட் அடித்தது. இவரது நடிப்பில் தற்போது பாக்ஸர் திரைப்படம் தயாராகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் அறிவழகன் இயக்கும் 'பார்டர்' திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். ரெஜினா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தாயாரிக்கின்றனர்.

arun vijay border first look date நடிகர் அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'

தற்போது படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 7 முதல் துவங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நொய்டாவில் படமாக்கப்பட்டது . இத்துடன் இந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டது. கொரோனா தடைகளுக்கு மத்தியிலும் இந்த படத்தை பட குழுவினர் வெற்றிகரமாக முடிக்க உள்ளனர். இந்நிலையில் கூடிய சீக்கிரமே அருண் விஜய்யிடம் இருந்து ஒரு அதிரடியான மிரட்டலை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யின் பார்டர் பட பர்ஸ்ட் லுக் வரும் ஜனவரி 26 குடியரசு தினமன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

arun vijay border first look date நடிகர் அருண் விஜய் மிரட்டும் 'பார்டர்'

People looking for online information on Arun Vijay, Border will find this news story useful.