‘K13’ ரிலீஸ் தேதி மாற்றம்- மே.1ல் இருந்து பின் வாங்கிய அருள்நிதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் 'K13' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

Arulnithi and Shraddha Srinath starring K13 release has been postponed to May 3

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘K13’ திரைப்படத்தை இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார். எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சான் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் முன்னதாக வரும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மே.1ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேல் 1-ல் இருந்து இரண்டு நாட்கள் கழித்து வரும் மே.3ம் தேதி உலகம் முழுவதும் ‘K13' திரைப்படம் ரிலீசாகவுள்ளது. இப்படத்தின் இசை இன்று முதல் வெளியாகிறது. முழுக்க முழுக்க சஸ்பன்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.