BGM Shortfilms 2019

'மன்னிச்சுடுங்க' - இதற்காக வருத்தம் தெரிவித்த தளபதி விஜய்யின் 'பிகில்' படத் தரப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

Archana Kalpathi apologies to fans for Thalapathy Vijay's Bigil Update

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, இந்துஜா என இந்த படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய்யின் காட்சிகள் நேற்றோடு (ஆகஸ்ட் 13) படமாக்கப்பட்டுவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருந்தன.

இதனையடுத்து நடிகர் விஜய் இந்த படத்தில் பணிபுரிந்த 300க்கும் மேற்பட்டோருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை எழுதியுள்ளார்.

அதில், 'பிகில் படத்தின் டப்பிங் மற்றும் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இனிமேல் எல்லா அப்டேட்டையும் உடனுக்குடன் வழங்க தயாராகிவிட்டோம். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 95 % சதவீதம் முடிவடைந்துள்ளன. அப்டேட்டுகள் சரியாக வழங்காததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.