Fakir Other Banner USA

"ஆஹாஹா கல்யாணம்".. பேட்ட ஸ்டைலில் கல்யாண வீட்டில் புகுந்து சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தும் பாடகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

 திருமண விழாக்களில் சர்ப்ரைஸ் கச்சேரி நடத்தி, ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார் நாட்டுப்புறப் பாடகர் அந்தோனிதாசன்.

Anthony Daasan,aka AD, signed exclusively to Sony Music,

பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் பாடகர் அந்தோனி தாசன். அவரின் சினிமாப் பாடல்களும் நாட்டுப்புறப்பாடல்களும் எல்லாத்தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒரு புதிய முயற்சியை தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டிருக்கிறார் அந்தோணிதாசன். அதன்படி திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாரும் எதிர்பாராத நேரத்தில், அந்தோனிதாசன் மற்றும் அவரது டீம் உள்ளே சென்று ஒரு மினி கச்சேரியையே நடத்துகிறது.

இந்த சுவாரஸ்யமான முயற்சியை முதல்முறையாக சென்னையில் திருமணவிழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் அரேங்கேற்றி வருகின்றனர். அந்தோனி தாசனின் திடீர் கச்சேரியை கேட்டு, திருமண வீட்டார் இன்ப அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். பேட்ட படத்தில் இடம்பெற்ற ஆஹா கல்யாணம், பாடலையும், தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடலையும் அந்தோனி தாசன் பாட திருமணவிழா மிகப்பெரும் திருவிழா போல கொண்டாட்டமாகிறது.

முக்கியமாக திரைப்படப் பாடல்களோடு நாட்டுப்புறப்பாடல்களையும் அந்தோனி தாசன் பாடுகிறார். நாட்டுப்புறப்பாடல்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அந்தத் திருமணவிழாவில் வந்திருந்த விருந்தினர்களின் மகிழ்ச்சியில் காண முடிகிறது. திருமணவிழாவில் ஒரு பெரிய பாடகர் யாரும் எதிர்பாராத விதமாக வந்து பாடுவது திருமண வீட்டார் உள்பட அங்கிருக்கும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பது மறுக்க முடியாது.

மேலும் இந்தத் திடீர் மினி கச்சேரி மூலமாக எல்லாத்தரப்பு மக்களிடமும் நாட்டுப்புறப் பாடல்கள் சென்றடையும் என அந்தோணிதாசன் நம்புகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, 'நம் மண்ணோட பாடல்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கான முயற்சி எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது' என்றார்.

சினிமா பாணியில் நிஜமாகவே திருமணவிழா மற்றும் குடும்ப விழாக்களில் யாருக்கும் தெரியாமல் யாரிடமும் தகவல் சொல்லாமல் யதார்த்தமாகச் சென்று அந்தோனி தாசன் பாடுவதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. கூடவே அவரது வாத்தியக்குழுவும் நாதஸ்வரம் மேளம் போன்றவற்றை லைவ்வாக இசைக்கும் என்பது குறிப்பிடதக்கது.