'பிகில்' பட நடிகையின் அடுத்த படத்திலிருந்து வெளியான அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

Announcement from Bigil Actress Varsha Bollamma's Choosi Choodanganne

அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தன. ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்த படத்தில் ஃபுட்பால் விளையாட்டு வீராங்கனையாக வர்ஷா பொல்லம்மாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இவர் தெலுங்கில் சூசி சூடங்கானே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவா என்பவர் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் குறித்து வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன் படி இந்த படத்தின் டீஸர் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி 11 மணிக்கு வெளியாகவுள்ளது.