‘இன்றுடன் 22வது வாரம்...’: கர்ப்பம் குறித்து எமி ஜாக்சன் பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

Amy Jackson first time shows off her Baby Bump - Video goes viral

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘2.0’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின் எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகாத எமி ஜாக்சன், ஹாலிவுட் வெப் சீரிஸ் தொடரில் நடித்தார்.

கடந்த சில மாதங்கங்களுக்கு முன் தொழிலதிபர் George Panayiotou உடனான காதல் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த எமி ஜாக்சன், தான் கர்ப்பமாக இருப்பதையும், தங்களது அன்பின் அடையாளமாக உருவாகியிருக்கும் குழந்தையை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். இதையடுத்து, தனது மறக்க முடியாத நாளாக தனது நிச்சயதார்த்த புகைப்படங்களையும் எமி ஜாக்சன் பகிர்ந்திருந்தார்.

தற்போது, முதன்முறையாக கர்ப்பம் அடைந்திருக்கும் வயிற்றுடம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘இன்றுடன் 22 வாரம் ஆவதாகவும், இதற்கு முன்பாக எனது கர்ப்பம் பற்றி ஏதும் பேசவில்லை, ஆனால் இப்போ பேச வேண்டும் என்று தோன்றியதால் இந்த வீடியோ’ என கூறியுள்ளார். மேலும், இனி தொடர்ச்சியாக கர்ப்ப கால அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறேன் என்றும் எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

‘இன்றுடன் 22வது வாரம்...’: கர்ப்பம் குறித்து எமி ஜாக்சன் பகிர்ந்த வீடியோ வீடியோ