www.garudabazaar.com

மகனுடன் தீபாவளி கொண்டாடிய எமி ஜாக்சன்.. பட்டாசு வெடிக்கும் போது கொடுத்த ரியாக்ஷன் தான் செம!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை எமி ஜாக்சன் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய வீடியோ & புகைப்படங்கள்  வெளியாகி உள்ளன.

Amy Jackson Celebrate Diwali with Her Son

Also Read | போடு வெடிய..தல தீபாவளி கொண்டாடிய புகழ் & பென்ஸி! வைரலாகும் சூப்பர் வீடியோ

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான 'மதராஸப்பட்டினம்' திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்ஸன். இவர் 'தாண்டவம்', 'ஐ', 'தங்க மகன்', 'கெத்து', 'தெறி' என தமிழில் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் '2.0' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Amy Jackson Celebrate Diwali with Her Son

ஜார்ஜ் பனையோடோவ் என்பவரை காதலித்து மணந்த எமிக்கு,  ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுடன் கடற்கரையில் விளையாடும் வீடியோ & புகைப்படங்களுடன் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கம்பி மத்தாப்பு வெடிக்கும் போது, அதில் உருவாகும் தீப்பொறியை வாயில் ஊதி எமி ஜாக்சன் மகன் அணைக்க முயல்வது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

Amy Jackson Celebrate Diwali with Her Son

முதல்முறையாக இந்தியாவில் தனது குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதாக எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

 

Also Read | விஜய் சேதுபதி & விஷ்ணு விஷாலின் 'இடம் பொருள் ஏவல்'.. ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Amy Jackson Celebrate Diwali with Her Son

People looking for online information on Amy Jackson, Amy Jackson Celebrate Diwali, Diwali Celebration will find this news story useful.