www.garudabazaar.com

ரச்சிதா பத்தி பேசும்போது விக்ரமன் சொன்னதை கேட்டுட்டு கலாய்த்த அமுதவாணன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Amudhavanan Praises Rachitha performance in cycle task

Also Read | வெளியேறிய போட்டியாளர் பற்றி உருக்கமாக பேசிய ஷிவின்.. நெகிழ்ந்த மைனா..!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Amudhavanan Praises Rachitha performance in cycle task

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார். மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் இருந்தது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Amudhavanan Praises Rachitha performance in cycle task

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் நடைபெற்றது. இப்படியான சுவாரஸ்யமான சம்பவங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் கார்டன் பகுதியில் அமுதவாணன், விக்ரமன், ADK ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அப்போது அமுது,"சைக்கிள் டாஸ்க்-ல ரச்சிதா கடைசி வரைக்கும் ஓட்டணும்னு முயற்சி பண்ணாங்க. பெரிய விஷயம் அதெல்லாம்" என்கிறார். அதற்கு விக்ரமன்," ஆண், பெண் அப்படியெல்லாம் இல்ல, முயற்சி பண்ணா யாரு வேண்டுமானாலும் ஓட்டலாம்" என பதில் அளிக்கிறார். தொடர்ந்து பேசும் அமுதவாணன்,"அப்படி சொல்லல. அவங்களுக்கு கால்ல அடி பட்டுருந்துச்சு. பொதுவா ஆண்கள் அதிகமா சைக்கிள் ஒட்டி தான் பார்த்திருக்கோம். எங்காவது பெண்கள் சாரி கட்டிக்கிட்டு ரொம்ப தூரம் ஓட்டுவாங்களா? அதாவது அவங்களுக்கு பிராக்டீஸ் இருக்காதுன்னு சொல்றேன். உடனே என்கிட்ட வந்துடுவியே. ஊர்மேல போற மாரியாத்தா-ங்குற கதையா இருக்கே. அந்த விஷயத்தையே விடுங்க" என சிரித்தபடியே சொல்கிறார்.

அப்போது, "பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த முதல் வாரமே ADK கிட்ட அதான் சொன்னேன். ஆண், பெண்-னு பிரிவினை பேசக்கூடாதுன்னு" என்கிறார் விக்ரம். அதற்கு பதில் அளித்த அமுது,"நான் அவங்களை பெருமையா சொன்னேன்" என்கிறார்.

Also Read | GP முத்துவின் சர்ப்ரைஸ் எண்ட்ரி .. வந்த உடனேயே பிக்பாஸ் கொடுத்த ஷாக்..

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan Praises Rachitha performance in cycle task

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Rachitha, Vijay Television, Vijay tv will find this news story useful.