தியேட்டரில் Prank செய்த அமலாபாலின் ‘ஆடை’ டீம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மேயாத மான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ‘ஆடை’ திரைப்படத்தில் நடிகை அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Amala Paul and Sarithiran's First Ever Live Prank for 'Aadai' film - video goes viral

வீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹீரோயினை மையப்படுத்திய இப்படத்தில் ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.‘ஆடை’ திரைப்படம் பல பிரச்சனைகளை கடந்து ஜூலை.20ம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அமலாபாலின் துணிச்சலான நடிப்பை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு வருகின்றனர்.

‘ஆடை’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தியேட்டருக்கு தனது ‘ஆடை’ டீமுடன் சென்ற அமலா பால், அங்கு ரசிகர்களிடம் படத்தின் விமர்சனத்தை நேரடியாக கேட்டு பெற்றதுடன், துணிச்சலான நடிப்பிற்காக பாராட்டுக்களையும் அமலா பால் பெற்றார்.

பெரும்பாலான மக்கள் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும், பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும் தங்களது விமர்சனங்களை வெளிப்படையாக தெரிவித்ததுடன் அமலா பாலை நேரில் பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.

தியேட்டரில் PRANK செய்த அமலாபாலின் ‘ஆடை’ டீம்! வீடியோ