வலிமையை முடிச்சுட்டு இந்த படத்தோட ரீமேக்தான்.! செம அறிவிப்பு Coming Soon.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை படத்தின் தயாரிப்பாளர் அடுத்து ரீமேக் செய்யவுள்ள திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

அஜித்தின் வலிமை தயாரிப்பாளரின் ரிமேக் படம் | ajith's valimai producer boney kapoor to remake article 15 in tamil

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஹெச்.வினோத் இயக்கிய இத்திரைப்படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்தார். இதையடுத்து இதே கூட்டணி இப்போது வலிமை படத்திற்காக இணைந்துள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்றது. 

இந்நிலையில் போனி கபூரின் அடுத்த படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்டிகள்-15 படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழில் இத்திரைப்படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை ஷூட்டிங் முடிந்த பிறகு இந்த படத்துக்கான நடிகர்கள், டைரக்டர் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. 

 

Entertainment sub editor