நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் தாயார் சத்யவதி காலமானார்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 08:41 AM
தமிழ் சினிமாவில் பிரபல மக்கள் தொடர்பாளராக விளங்குபவர் சுரேஷ் சந்திரா. இவர் நடிகர் அஜித் குமாரின் மேனேஜர் ஆவார். இவரது தாயார் சத்யவதி சுதர்ஷன் உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் உடல்குறைவு காரணமாக இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அவரது இறுதிச்சடங்கு இன்று (ஆகஸ்ட் 27) மாலை 4 மணிக்கு சுதர்ஷன வில்லா, 85, மேட்டுக்குப்பம் ரோடு, மதுரவாயல் என்ற முகவரியில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
We regret to inform the demise of the mother of @SureshChandraa, Mrs.Sathyavathy Sudarshan. #RIP 💔 pic.twitter.com/1MgZXFeJx4
— Done Channel (@DoneChannel1) August 26, 2019
Tags : Suresh Chandra, Sathyavathy