RRR Others USA
www.garudabazaar.com

போடு சக்க! அஜித்தின் வலிமை.. வெளியானது ஓடிடி டிரைலர்! இது செம்ம மாஸா இருக்கே….

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வலிமை திரைப்படம் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஜி 5 தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது.

Ajith Valimai movie ott trailer released

செம்ம… இணைந்து வாழும் 23 ஆண்டுகள்.. அஜித் - ஷாலினியின் unseen pics!

வலிமை எதிர்பார்ப்பும் ரிலிஸும்…

அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது. இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டிய படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

வலிமை படத்தின் தூண்கள்…

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடித்தனர். ராஜ் ஐயப்பா அஜித்தின் தம்பி வேடத்தில் நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்ற, சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றினார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்தார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் மிரட்டலான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது.

Ajith Valimai movie ott trailer released

ஓடிடியில் வலிமை

வலிமை படம் வரும் மார்ச் 25 ஆம் தேதி முதல் Zee5 தமிழ் ஒடிடியில் வெளியாக உள்ளது. தமிழ், கன்னடம்,இந்தி, தெலுங்கு மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதனை Zee5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ள நிலையில் இப்போது இன்னொரு சர்ப்ரைஸாக வலிமை படத்தின் ஓடிடி டிரைலர் வெளியாகியுள்ளது. 1.06 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் ஆக்‌ஷன் பட பிரியர்களுக்கு பிடிக்கும் விதமாக மாஸாக உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் கொடுத்த ஆக்‌ஷன் காட்சிகளை இந்த டிரைலரில் இணைத்துள்ளனர். இந்த டிரைலர் இப்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது.

Ajith Valimai movie ott trailer released

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித், ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அடுத்த படமாக அஜித் 61  உருவாக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அஜித் லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத நாளில் ….பீஸ்ட் ரிலீஸில் இந்த வித்தியாசத்த கவனிச்சீங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Valimai movie ott trailer released

People looking for online information on Ajith Kumar, Ajith Valimai movie, அஜித், ஓடிடி, வலிமை, OTT Trailer, Valimai Movie will find this news story useful.