www.garudabazaar.com

உலக சுற்றுலாவுக்கு தல அஜித் தயாராகிட்டாரா? புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.

AJITH READY FOR WORLD TOUR FEMALE BIKER SHARES EXCLUSIVE

வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி நேற்று மாலை வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

AJITH READY FOR WORLD TOUR FEMALE BIKER SHARES EXCLUSIVE

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித்தின் மேனேஜரும் நண்பருமான சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல பைக் ரைடரும், உலக சாதனையாளருமான மாரல் யாசர்லூவை அஜித் சந்தித்ததை பகிர்ந்து இருந்தார்.

AJITH READY FOR WORLD TOUR FEMALE BIKER SHARES EXCLUSIVE

மாரல் யாசர்லூ  உலகம் முழுவதும்  பைக்கில் 7 கண்டங்களையும், 64 நாடுகளையும் கடந்து சென்றவர் ஆவார். இவரைதான் ‘தல’ அஜித் டெல்லியில் சந்தித்து  மாரல் யாசர்லூவின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொண்டார். எதிர்காலத்தில் தனது மோட்டார் பைக் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் அஜித், அவருடைய ஆலோசனைகளைப் பெற சந்தித்ததாக சுரேஷ் சந்திரா டிவிட்டரில் அறிவித்தார்.

இந்நிலையில் தல அஜித்தை சந்தித்த புகைப்படங்களை மாரல் யாசர்லூ பகிர்ந்துள்ளார், அதில் அஜித் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் என்பதை கூகுள் செய்து தெரிந்து கொண்டதாகவும், லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்ட நடிகரான தல அஜித் பழக இனிமையாகவும், மிகவும் மென்மையாக பேசும் மனிதர் என்றும், அவருடைய அனுமதியுடன் இந்த படங்களை பகிர்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

AJITH READY FOR WORLD TOUR FEMALE BIKER SHARES EXCLUSIVE

 

 

 

உலக சுற்றுலாவுக்கு தல அஜித் தயாராகிட்டாரா? புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AJITH READY FOR WORLD TOUR FEMALE BIKER SHARES EXCLUSIVE

People looking for online information on Ajith Kumar, Valimai will find this news story useful.