BREAKING : ப்ரியா பவானி சங்கரை தொடர்ந்து "இந்தியன்-2" படத்தில் இணைந்த முன்னணி ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் பேசுறேன் காக்கா முட்டை  கனா படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Aishwarya Rajesh on board for Kamal Haasan Indian 2

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன். ஊழல், லஞ்சம் ஆகிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்திற்கு பின்னா் கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை.

கடந்த ஜனவரி மாதம் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு ஆரம்பித்த வேகத்திலேயே சில நாட்களில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குவதால், இடையிடையே இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .  இதற்கு முன்னதாக சித்தார்த் மற்றும் ப்ரியா பவானி சங்கர் இணைந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது க/பே ரான சிங்கம், சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ் கே 16 படங்களில் நடித்து வருகிறார்.