Breaking : தளபதி விஜய்யின் அடுத்தப்பட ஷூட்டிங் பிளான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தளபதி 63’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பிளான் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

After Thalapathy 63, Vijay to start shooting for lokesh Kanagaraj's Thalapathy 64 from September

‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி-விஜய் கூட்டணியில் ‘தளபதி 63’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை ‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மரியாதை நிமித்தமாக தயாரிப்பாளர் பிரிட்டோவை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த சந்திப்பின் போதுஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், எடிட்டர் பிலோமின்ராஜ், இசையமைப்பாளர் அனிருத், ஆகியோர் உடனிருந்தனர். இவர்கள் அனைவரும் இப்படத்தில் பணிபுரியவிருப்பது உறுதி செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

‘தளபதி 64’ படம் பற்றி நமக்கு கிடைத்த கூடுதல் தகவலின்படி, இதன் ஷூட்டிங்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 63’ ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அதனை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் பணிகளை தொடங்குவார் என கூறப்படுகிறது. இப்படம் வரும் 2020ம் ஆண்டு தமிழ் புத்தாண்டிற்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.