தலைவர் 168, தனுஷ் படங்களுக்கு பிறகு அதிரடியாக தொடங்கும் சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட படம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 06, 2020 02:11 PM
விஷால் ஹீரோவாக நடித்திருந்த 'ஆக்சன்' படம் கடந்த வருடம் நவம்பரில் வெளியாகியிருந்தது. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஹாரர் - காமெடி ஜானரில் வெளியான 'அரண்மனை' 1 மற்றும் 2 பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'அரண்மனை' படத்தின் மூன்றாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி நடிக்கவிருக்கிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் துவங்கப்படவிருக்கிறது.
Tags : Sundar C, Aranmanai 3, Arya, Sun pictures, Raashi Khanna