Fakir Other Banner USA

‘எல்லா பெண்களும் பொறாமையில் பொங்க..’ - அரவிந்த்சாமிக்கு ஹாப்பி பர்த்டே சொன்ன சிசிவி ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அரவிந்த்சாமி. அதைத் தொடர்ந்து ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘மின்சார கனவு’ போன்ற திரைப்படங்களின் மூலம் சாக்லெட் பாயாகவும், ரொமான்ஸ் ஹீரோவாகவும் வலம் வந்தார்.

Aditi Rao Hydari wishes Arvind Swami on his birthday with hot picture of her from CCV

ஏராளமான ரசிகைகளின் ட்ரீம் பாயாக இருந்த அரவிந்த்சாமி சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் மூலம் மாஸ் ரீஎண்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி, ரொமான்ஸ் ஹீரோ இமேஜில் இருந்து ஸ்டைலிஷ் வில்லனாக தன்னை அடையாளப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து ‘போகன்’, ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்களில் நெகட்டிவ் கேரக்டரிகளில் நடித்து அசத்தினார். இந்நிலையில், செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமியின் காதலியாக நடித்திருந்த அதிதி ராவ்  ஹிதாரி, அரவிந்த்சாமிக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘எல்லா பெண்களும் பொறாமையில் எனக்கு மெசேஜ் அனுப்பினாங்க.. ஹார்ட்திராப் அரவிந்த்சாமிக்கு ஹாப்பி பர்த்டே’ என குறிப்பிட்டு, மழையில் அரவிந்த்சாமியுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்து அதிதி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் ‘புலனாய்வு’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர், அரவிந்த்சாமியின் பிறந்தநாளையொட்டி இன்று வெளியானது.