www.garudabazaar.com

"அப்போ 500 ரூபாய்க்கு ஒரு ஹோட்டல்ல வேலை பாத்துருக்கேன்" - மனம் திறந்த சமந்தா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

actress samantha latest instagram QA session with her fans

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

actress samantha latest instagram QA session with her fans

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

actress samantha latest instagram QA session with her fans

மேலும் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

actress samantha latest instagram QA session with her fans

இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெளியீட்டுக்காக இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில், "தன்னுடைய முதல் சம்பளம் 500 ரூபாய் என்றும், 10 ஆவது 11-வது படிக்கும் போது ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாகவும்" கூறினார்.

"அப்போ 500 ரூபாய்க்கு ஒரு ஹோட்டல்ல வேலை பாத்துருக்கேன்" - மனம் திறந்த சமந்தா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actress samantha latest instagram QA session with her fans

People looking for online information on Instagram, Kaathuvaakula Rendu Kaadhal, KRK, Samantha will find this news story useful.