''ஹைதராபாத் வா, அவங்க மிஸ் பண்றாங்க'' - ராஷ்மிகாவை அழைத்த விஜய் தேவரகொண்டா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ( மே 10 ) ரசிகர்கள், பிரபலங்கள் ஒரு சேர சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அவர்கள் பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து  விஜய் தேவரகொண்டா நன்றி தெரிவிக்கும் பதிவுகள் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'மகிழ்ச்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள் என்னுடைய காம்ரேட்'' என தெரிவிக்க, மந்தனா திரும்ப ஹைதராபாத் வா. கேங் மிஸ் பண்றாங்க. என தெரிவிக்க, அதற்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா, என்ன விட்டு எதுவும் ஃபன் பண்ணாதீங்க'' என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர், நடிகை ராஷி கண்ணா, ரிது வர்மா, இயக்குநர் பூரி ஜெகந்நாத் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தனர். விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், ஃபைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.

Entertainment sub editor