எம்ஜிஆரையும் என்னையும் வம்புக்கு இழுத்து சீப் பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி - நடிகை கண்டனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது நடப்பு அரசியல் குறித்து விமர்சித்து பதிவிட்டு வருகிறார். இது அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்ஜிஆர் மற்றும் நடிகை லதாவை மேற்கோள்காட்டி, ஐபிஎல் போட்டியை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

Actress Latha condemned Kasthuri's tweet about MGR

இதனையடுத்து நடிகை லதா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எம்.ஜிஆரையும், என்னையும்  தவறாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நடிகை கஸ்தூரிக்கு முதலில் என் கண்டனத்தை தெரிவிக்கிறேன். ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே.. கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி.. இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.  என்றார்.

அதனைத் தொடர்ந்து கஸ்தூரி செய்துள்ள பதிவில்,  MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு - நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை. இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன். என்று தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.