'17 வருடத்துக்கு பிறகு.. மன்மத ராசா பாடலுக்கு சூப்பர் ஆட்டம்..! - சாயா சிங்கின் அசத்தலான வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாயா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

மன்மத ராசா பாடலுக்கு சூப்பர் ஆட்டம் போட்ட சாயா சிங் | actress chaya singh recreates manmadha rasa song beautifully as her birthday treat

தனுஷின் திருடா திருடி படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர் போட்ட தெறி ஆட்டம், சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இவர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, விஷாலின் ஆக்‌ஷன், அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தினார். 

இந்நிலையில் நடிகை சாயா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். டான்ஸ் மாஸ்டர் சிவஷங்கருடன் அண்மையில் மன்மத ராசாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் டான்ஸ் ஆடியோ அழகான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் சிவஷங்கர் மாஸ்டரை பார்த்த போது எடுத்த வீடியோ இதுவாம். இந்த வீடியோவை தனது பிறந்தநாள் ட்ரீட்டாக கொடுத்துள்ளார் சாயா சிங். 

 

Entertainment sub editor