மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நடிகர் விஷால் படம்... மரண மாஸ் செய்தி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் 'சக்ரா'. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ஷ்ர்ரதா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ சங்கர், மனோபாலா, KR விஜயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஒளிப்பதிவு வேலைகளை பாலசுப்ரமணியம் கையாண்டுள்ளார்.

actor vishal chakra movie latest update தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஷால் படம்

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் இறுதிகட்ட வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் சக்ரா படத்தின் டிரெய்லர் கொரோனா ஊரடங்கின் போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் OTT-யில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயத்தை அறிவித்திருக்கிறார் நடிகர் விஷால்.

actor vishal chakra movie latest update தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஷால் படம்

மாஸ்டர், ஈஸ்வரன் படங்களுக்கு பிறகு விஷாலின் 'சக்ரா' திரைப்படமும் திரையரங்குகளில் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இது பற்றி கூறியுள்ள விஷால் "ஆம் உறுதியாகிவிட்டது. ஆக்ஷன் திரில்லர் படமான சக்ராவை தியேட்டர்களில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நான்கு தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறோம். மிக பிரம்மாண்டமாக படத்தின் ரிலீஸ் இருக்கப்போகிறது. அடுத்த அப்டேட்களுக்கு காத்திருங்கள்" என்று கூறியுள்ளார்.

மாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நடிகர் விஷால் படம்... மரண மாஸ் செய்தி! வீடியோ

Tags : Chakra, Vishal

தொடர்புடைய இணைப்புகள்

actor vishal chakra movie latest update தியேட்டரில் ரிலீஸ் ஆகும் விஷால் படம்

People looking for online information on Chakra, Vishal will find this news story useful.