நடிகர் விஜய்யின் 'தளபதி 65' பட இயக்குநர் இவரா ? - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

Actor Vijay's Thalapathy 65 director not yet finalised

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

மேலும், இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன், கௌரி  கிஷன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூஸ் வர்க்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் 'தளபதி 65' படத்தை 'தடையற தாக்க', 'தடம்' படங்களின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்நிலையில் இந்த செய்திகளில் உண்மையில்லை என்று எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.