www.garudabazaar.com

Video : சரியான தீபாவளி சரவெடி... வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்... கொண்டாடும் தளபதி ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

actor vijay's Master film teaser released வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, நேரடியாக தியேட்டர்களில் மாஸ்டர் 10-ஆம் தேதி அன்று வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி., ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். மரண மாஸாக இருக்கும் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தளபதி விஜய்யின் மாஸ்டர் டீசர் தீபாவளி சரவெடியாகி வெடித்துள்ளது. போட்றா வெடிய..!

VIDEO : சரியான தீபாவளி சரவெடி... வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்... கொண்டாடும் தளபதி ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actor vijay's Master film teaser released வெளியானது மாஸ்டர் படத்தின் டீசர்

People looking for online information on Lokesh Kangaraj, Master, Vijay will find this news story useful.