www.garudabazaar.com

"நிஜமான காடு இது".. சூரி வெளியிட்ட மிரட்டலான விடுதலை பட ஷூட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.

Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS

Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 'OPPENHEIMER'.. ஆச்சரியத்தில் ஆழ்த்திய டிரெய்லர்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகிறது.

சில நாட்களுக்கு முன், ​​விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS

விடுதலை படத்தின் நடிகர்கள் குழுவில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்த நட்சத்திரக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS

இந்த விடுதலை படத்திலும் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

தற்போது விடுதலை-1 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்ற விடுதலை-2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS

இந்நிலையில் நடிகை நடிகர் சூரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சூரிய அஸ்தமன பிண்ணனியில் இளஞ்சிவப்பு நிறத்தில் வானம் காட்சியளிக்கின்றது. இந்த புகைப்படங்கள் "ஸ்டூடியோவில் எடுத்ததல்ல.. நிஜமான அடர்ந்த காட்டில் எடுத்தது" என்று சூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Also Read | FIFA World Cup மேட்சில் யுவன்.. துணிவு T-சர்ட் அணிந்து பிரபல வினியோகஸ்தர்.. வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Soori Shared Vetrimaaran VIDUTHALAI Movie BTS

People looking for online information on Parotta Soori, Soori, Vetrimaaran, Viduthalai, VIDUTHALAI Movie BTS will find this news story useful.