சாலை விபத்தில் சிக்கிய இளம் நடிகர்!! மருத்துவமனை வந்த பவன் கல்யாண்.. பரபரப்பு Video!
முகப்பு > சினிமா செய்திகள்தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சாலை விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. அவருக்கு வயது 34.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் என கூறப்படும் சாய் தரம் தேஜ் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்தான் இன்று ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் தனது ஸ்போர்ட் பைக்கில் சென்றுள்ளார்.
ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், நடிகர் சாய் தரம் தேஜ், பைக்கில் இருந்து சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி தலை, கை, மார்பு பகுதிகளில் படுகாயமடைந்தார் என கூறப்படுகிறது. மேலும் சுயநினைவை இழந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் அவர் முற்றிலும் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டு தேறி வருவதாகவும், அவர் நலமாகவே இருக்கிறார், பயப்பட வேண்டாம் என்றும் ரசிகர்களுக்கு சாய் தரம் தேஜ் தரப்பு நண்பர்கள் சமூக வலைப்பக்கங்கள் மூலம் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே அவரைக் காண நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனை சென்றுள்ளார். மேலும் பலர் நடிகர்கள் வந்தவண்ணம் உள்ளனர். விபத்து மற்றும் மருத்துவமனை தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.