சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை இழந்தது குறித்து பிரபல ஹீரோ விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் 'தலைவர் 168' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Actor Prithviraj speaks about Superstar Rajinikanth movie

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது டிரைவிங் லைசென்ஸ் படம் பற்றி ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது Complete Actor  மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய 'லூசிஃபர்' படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க வாய்ப்பு வந்தது என்றும் ஆனால் 'ஆடுஜீவிதம்' படத்தின் ஷூட்டிங் பணிகள் இருந்ததனால் அந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதுகுறித்து ரஜினிகாந்திற்கு நீண்டதொரு விளக்கக்கடிதம் எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Entertainment sub editor