"ரொம்ப கஷ்டம்.. அவருட்ட Answer கேட்டா கரெக்டா இருக்கும்.." பிரசாந்த் & சிம்ரன் செம Fun .. Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொண்ணூறுகளின் காலகட்டத்தில், அடுத்தடுத்து பல பிரபல இயக்குனர்களுடன் சேர்ந்து, நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் பிரசாந்த்.

actor Prashanth and simran fun interview exclusive

ஜீன்ஸ், திருடா திருடா, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட பிரசாந்தின் பல திரைப்படங்கள், இன்று வரையிலும் எவர்கிரீன் வகையில் அமைந்துள்ளது.

தொடர்ந்து, திரைப்படங்கள் நடித்து வரும் பிரசாந்தின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'.

டாப் ஸ்டாரின் அடுத்த படம்..

ஹிந்தியில், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி இருந்த 'அந்தாதூன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். பார்வையற்ற நபராக பிரசாந்த் நடித்துள்ள இந்த படத்தை அவரது தந்தையும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான தியாகராஜன் இயக்கி உள்ளார். இதில், நடிகர் பிரசாந்துடன் சிம்ரன், ப்ரியா ஆனந்த், யோகி பாபு, கார்த்திக், சமுத்திரக்கனி, வனிதா, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

actor Prashanth and simran fun interview exclusive

இதனிடையே, கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரசாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதே போல, அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, பிரசாந்த் ரசிகர்களுடன் நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தது 'Behindwoods'. இதில், நடிகர் பிரசாந்துடன் நடிகைகள் சினேகா, லைலா, வனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கலகலப்பா தான் பதில் சொல்றாங்க..

அந்த வகையில், நடிகர் பிரசாந்த்துடன் ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், தமிழ் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகை சிம்ரனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருவரும் மாறி மாறி கலகலப்பாக பேசும் விஷயங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை அள்ளி இருந்தது. இதன் ஒரு பகுதியில், பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடித்த திரைப்படங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

actor Prashanth and simran fun interview exclusive

இதில், ஜோடி படத்தில் சிம்ரன் மற்றும் பிரசாந்த் கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பது பற்றி, இருவரிடமும் மாறி மாறி கேட்கப்பட்டது. ஆனால், இருவரும் பதில் தெரியாமல் யோசிக்க, போன் பயன்படுத்தி பதில் சொல்ல முயற்சிக்கிறார் பிரசாந்த். கடைசியில், கூகுள் உதவியுடன் ஜாலியாக பதில் சொல்லவும் செய்கிறார். இப்படி தொகுப்பாளினி கேட்கும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு சீரியஸாக பதில் சொல்லாமல், மிக மிக கலகலப்பாக இருவரும் பதில் சொல்கின்றனர்.

மறக்க முடியாத படம்..

தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, பிரசாந்துடன் இணைந்து, அந்தகன் திரைப்படத்தில் நடித்துள்ளது பற்றி பேசிய சிம்ரன், "கே.எஸ். ரவிக்குமார், ஊர்வசி, பிரியா, மனோபாலா என நிறைய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் ஒன்று அந்தகன். இது ஒரு அருமையான திரைப்படம்" என தெரிவித்தார்.

actor Prashanth and simran fun interview exclusive

அதே போல, அந்தகன் படத்தின் ரிலீஸும் விரைவில் அறிவிக்கப்படும் என பிரசாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

"ரொம்ப கஷ்டம்.. அவருட்ட ANSWER கேட்டா கரெக்டா இருக்கும்.." பிரசாந்த் & சிம்ரன் செம FUN .. EXCLUSIVE வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor Prashanth and simran fun interview exclusive

People looking for online information on Andhagan, Ks ravikumar, Prashanth, Priya Anand, Simran, Thiagarajan will find this news story useful.