'யாரையும்' சந்திக்கவில்லை... தன்னைத்தானே 'தனிமைப்படுத்தி' கொண்ட பிரபல நடிகர்!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி கொண்டிருக்கும் சூழ்நிலையில், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
![தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் | actor prabhas self Quarantine தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ் | actor prabhas self Quarantine](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/actor-prabhas-self-quarantine-photos-pictures-stills.jpg)
பாகுபலி உட்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் பிரபாஸ் தனது படக்குழுவினருடன் 'பிரபாஸ் 20' படப்பிடிப்பிற்காக சமீபத்தில் ஜார்ஜியா சென்றிருந்தார். இந்த நிலையில் ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்து இந்தியா திரும்பி வந்த பிரபாஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் அவர் “வெளிநாட்டுப் படப்பிடிப்பை பத்திரமாக முடித்துத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். நீங்கள் அனைவரும் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்,'' என தெரிவித்து இருக்கிறார்.