www.garudabazaar.com

KamalHaasan : 68வது பிறந்த நாளை கொண்டாடும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்..! ரசிகர்கள் வாழ்த்து ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரமக்குடியில் பிறந்த இந்திய முன்னணி நடிகர் பத்மஸ்ரீ கமல்ஹாசன், கலைத்துறையில் பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் குவித்துள்ளார்..

Actor Padmashree Kamal Haasan 68th birthday 2022 nov 7

ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய நடிகர் கமல்ஹாசனின் பயணம், விக்ரம் திரைப்படம் வரை தொடர்ந்துள்ளது. உலக அளவில் தமிழ் சினிமாவுக்கும், இந்திய சினிமாவுக்கும் பெருமை சேர்த்த நடிகர் கமல்ஹாசன் பன்மொழிகளில் நடித்துள்ளார்.

பத்மஸ்ரீ கமல்ஹாசன் என அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதுடன் நடனம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, திரைக்கதை - வசனம் எழுதுவது, திரைப்படம் இயக்குவது, பின்னணி குரல் கொடுப்பது, திரைப்படங்களை தயாரிப்பது என பன்முக பணிகளை செய்யும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தமது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்திலான புதிய படத்தில் தயாரித்து நடிக்கவிருக்கிறார். அவருடன் இணைந்து இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த 2022, நவம்பர் 7-ஆம் தேதி, நடிகர் கமல்ஹாசன் தமது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமது இந்த பிறந்த நாளில் நடிகர் கமல்ஹாசன், தமது 68-வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலகர்கள், இலக்கிய ஆளுமைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Padmashree Kamal Haasan 68th birthday 2022 nov 7

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Kamal Haasan, Kamal Haasan 68th Birthday, Kamal Haasan birthday, KAMALHAASAN will find this news story useful.