குட்டி அகில உலக சூப்பர் ஸ்டார் பிறந்தாச்சு..! - Mirchi சிவா Happy அண்ணாச்சி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அகில உலக சூப்பர் ஸ்டார் நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் பிரியா தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Actor Mirchi Shiva and his Wife Priya were blessed with a baby 'boy' who they have named 'Agasthya'

வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மிர்ச்சி சிவா. அதன் பிறகு சரோஜா, தமிழ்ப்படம், வ குவார்ட்டர் கட்டிங், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்பட பல படங்களில் நடித்தார்.

இவர் தனது நீண்ட நாள் காதலியும், தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனை பிரியா என்பவரை கடந்த 2012ம் ஆண்டு நவம்பர்.15ம் தேதி திருமணம் செய்துக் கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இன்று (ஜூலை.25) பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ‘அகஸ்தியா’ என பெயர் சூட்டியுள்ளனர்.

சமீபத்தில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம் 2’ ஸ்பூஃப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தை இயக்கிய எஸ்.பி.ஹொசிமன் இயக்கி வரும் ‘சுமோ’ திரைப்படத்தில் சிவா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் சிவாவுடன் பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நிஜ சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார்.