பிக்பாஸ் கவினுக்கு பழைய ஞாபகம் வந்துருச்சு போல - கனா காணும் காலங்கள் மெமரீஸ் ஷேர் பண்றாரே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கனா காணும் காலங்கள் சீரியலின் போது எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். 

கவின் பகிர்ந்த கனா காணும் காலங்கள் போட்டோ | actor kavin shares a photo took during kana kaanum kaalangal time

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்தவர் கவின். இதையடுத்து சரவணன் மீனாட்சி என்கிற தொடரில் நடித்து இவர் பிரபலமானார். சில படங்களில் சிறிய வேடத்தில் தோன்றிய இவர், நட்புனா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவானார். மேலும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் தனக்கென்று பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். 

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியலின் போது எடுத்த போட்டோவை அவர் பகிர்ந்துள்ளார். இதில் தற்போது பிசியான நடிகர்களாக இருக்கும் ப்ளாக் பாண்டி, வைஷாலி கிருஷ்ணன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். கவின் தற்போது லிஃப்ட் என்கிற படத்தில் அம்ரிதா அய்யருடன் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. 

 

Entertainment sub editor