தல அஜித்துன்னு சொன்னாலே மாஸ்தான் - இளம் சென்சேஷனல் நடிகர் ஓப்பன் ஸ்டேட்மென்ட்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித் பற்றி தற்போதைய இளம் சென்சேஷனல் நடிகர் ஹரிஷ் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தல என ரசிகர்களால் புகழப்படுபவர் அஜித். இவர் நடித்த பில்லா, மங்காத்தா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, தல அஜித் பற்றி சொல்லுங்க என ரசிகர் ஒரு கேள்விக்கு, Man of the Masses என அவர் பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதில் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அண்மையில் அஜித் அளித்த நிதியுதவிக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Man of the masses ❤️#Thala #AskHarishKalyan https://t.co/LtRN25TScb
— Harish kalyan (@iamharishkalyan) April 8, 2020