3டியில் பிரம்மாண்டமாக மஹாபாரத பின்னணியில் உருவாகும் 'குருஷேத்ரா' - டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 12, 2019 12:25 PM
மஹாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு 3டியில் உருவாகி வரும் படம் குருஷேத்திரா. இந்த படத்தில் கன்னட நடிகர் தர்ஷன் துரியோதனனாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் கர்ணனாக நடிக்கிறார். இந்த படத்தை முனிரத்னா தயாரித்துள்ளார். நாகண்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தமிழில் வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படத்துக்கு ஹரிகிருஷ்ணா இசையமைக்க, ஜே வின்சன்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
3டியில் பிரம்மாண்டமாக மஹாபாரத பின்னணியில் உருவாகும் 'குருஷேத்ரா' - டிரெய்லர் இதோ வீடியோ
Tags : Kurushetra, Arjun Sarja, Darshan, Sneha