KAAPAN USA OTHERS

'எனக்கு அவர பார்த்தாலே பயம் தான்' - தனுஷின் 'அசுரன்' படம் குறித்து பிரபல நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்'. இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Abhirami speaks about Dhanush and Vetrimaaran's Asuran

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை அம்மு அபிராமி Behidnwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ''வெற்றிமாறன் சார் வேற லெவல். அவர் படங்கள் எல்லாமே மாஸ்டர் பீஸ். எடுத்தது கொஞ்ச படமா இருந்தாலும் எல்லாமே நச்சுனு இருக்கு. எனக்கு அவர பார்த்தாலே பயம் தான். வொர்கனா வொர்க் தான். நிறைய கத்துக்கலாம் அவர்கிட்ட'' என்றார்.

'எனக்கு அவர பார்த்தாலே பயம் தான்' - தனுஷின் 'அசுரன்' படம் குறித்து பிரபல நடிகை வீடியோ