Reliable Software
www.garudabazaar.com

விஜய் டிவியின் பிரபல சீரியலில் பிக்பாஸ் ஆரி... வெளியான போட்டோ.. செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதேபோல் ஆரிக்கு கொடிக்கான ரசிகர்கள் உருவாகி விட்டனர் அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு ஆரி மீண்டும் விஜய் டிவி சீரியலில் வர இருக்கிறார் என்ற செய்தி அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

aari to be part of this serial in special episode பிரபல சீரியலில் பிக்பாஸ் ஆரி

விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது. இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். தற்போது ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணையும் மகாசங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் ஒரு பகுதியாக பிக்பாஸ் நடிகர் ஆரி, சோம், சம்யுக்தா போன்றோர் ஸ்பெஷல் எபிசோடில் இடம் பெற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

aari to be part of this serial in special episode பிரபல சீரியலில் பிக்பாஸ் ஆரி

Tags : Aari

தொடர்புடைய இணைப்புகள்

aari to be part of this serial in special episode பிரபல சீரியலில் பிக்பாஸ் ஆரி

People looking for online information on Aari will find this news story useful.