பாலிவுட்டில் கெத்து காட்ட போகும் "விக்ரம் வேதா" - ஹீரோ இவர்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாதவன்-விஜய் சேதுபதி இணைந்து நடித்த “விக்ரம் வேதா” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான்  நடிக்கவுள்ளனர்.

Aamir Khan, Saif Ali Kha Remake of Tamil 'Vikram Vedha'

கோலிவுட்டில் மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாலிவுட் ரீமேக்கில் பிரபல நடிகர்களான அமீர் கான் மற்றும் ஷயிஃப் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தை அமீர் கானும், மாதவன் கதாப்பாத்திரத்தை ஷயிஃப் அலிகானும் ஏற்று நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கை, தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி ஆகியோரே இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.