7-ஜி எடுத்த போது... - புதுப்பேட்டை-2க்கு ரெடியாகும் செல்வராகவன் பகிர்ந்த நினைவுகள்.
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
![செல்வராகவனின் 7-ஜி நினைவுகள் | before dhanush's pudhupettai 2 selvaraghavan shares a pic from 7 g rainbow colony shoot செல்வராகவனின் 7-ஜி நினைவுகள் | before dhanush's pudhupettai 2 selvaraghavan shares a pic from 7 g rainbow colony shoot](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/7-before-dhanushs-pudhupettai-2-selvaraghavan-shares-a-pic-from-7-g-rainbow-colony-shoot-news-1.jpg)
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளுக்காக கொண்டாடப்படுபவர் செல்வராகவன். இவர் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆல் டைம் ஃபேவரைட். இவர் தற்போது தனுஷை வைத்து புதுப்பேட்டை-2 உருவாக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 7-ஜி செல்வா என பதிவிட்டுள்ள அவர், அத்துடன் சேர்த்து, 7-ஜி ரெயின்போ காலனி படப்பிடிப்பின் போது, புல்லட் மேல் அவர் அமந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். செல்வராகவனின் இந்த பதிவு அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
7 G selva 😂😂😎😎 https://t.co/F64qrjH6JA
— selvaraghavan (@selvaraghavan) March 19, 2020